

லாகூர்,
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இலங்கை பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் 2 டி20 போட்டிகளிலும் வெற்றிபெற்ற பாகிஸ்தான் டி20 தொடரை 2-0 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான், இலங்கை இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. ராவல்பிண்டியில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது.
இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்கள் முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி பாகிஸ்தான் 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் எடுத்துள்ளது.
இப்போட்டியில் வெற்றிபெற்று டி20 தொடரை முழுமையாக கைப்பற்ற பாகிஸ்தானும், ஆறுதல் வெற்றிபெற இலங்கையும் போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.