“பிரதமர் மோடியிடமிருந்து கிடைத்த கடிதம் எனக்கு மாபெரும் பெருமை” - பிரெட் லீ!

ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீக்கு பிரதமரிடமிருந்து வாழ்த்து கடிதம் அனுப்பப்பட்டது.
“பிரதமர் மோடியிடமிருந்து கிடைத்த கடிதம் எனக்கு மாபெரும் பெருமை” - பிரெட் லீ!
Published on

புதுடெல்லி,

இந்தியா முழுவதும் 73-வது குடியரசு தின விழா கோலாகலமாக கடந்த 26ந்தேதி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர்கள் ஜாண்டி ரோட்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோருக்கு குடியரசு தின வாழ்த்துக்களை கடிதம் மூலமாக பகிர்ந்திருந்தார். இந்த கடிதம் சமூக வலைத்தள பக்கங்களில் பகிரப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீக்கு பிரதமரிடமிருந்து வாழ்த்துக் கடிதம் அனுப்பப்பட்டது. இந்தியா உடனான அவரது நட்புக்கு, நன்றியின் அடையாளமாக பிரதமரிடமிருந்து அவருக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், இந்தியப் பிரதமரின் செயலுக்கு பிரெட் லீ நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, இந்தக் கடிதத்தைப் பெறுவது ஒரு பெருமை. நான் இந்தியாவையும் அதன் மக்களையும் எவ்வளவு நேசிக்கிறேன் மற்றும் நன்றியுள்ளவனாக உணர்கிறேன் என்பது இரகசியமில்லாமல் வெளிப்படையாக தெரிந்துள்ளது.

இந்த அழகான நாட்டை ரசிப்பதில் பல வருடங்களை என்னால் செலவிட முடிந்ததற்கு நான் நன்றியுள்ளவனாக உணர்கிறேன்.

நான் சில நாட்கள் தாமதமாகியிருக்கலாம், ஆனாலும், குடியரசு தின வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com