சூப்பர் 8 சுற்று: நியூசிலாந்து - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது

ஆட்டம் கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.
சூப்பர் 8 சுற்று: நியூசிலாந்து - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது
Published on

கொழும்பு,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களை நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இன்று முதல் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. அதன்படி இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதவிருந்தன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்ய இருந்தது.

ஆனால் எதிர்பாராதவிதமாக திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. மழை நின்ற பின் போட்டிகள் தொடங்கும் என நடுவர்கள் அறிவித்தனர். போட்டி நடைபெறும் என ரசிகர்களும் மைதானத்தில் காத்துக்கொண்டு இருந்தனர்.

ஆனால் மழை விடாமல் தொடர்ந்து பெய்துகொண்டு இருந்தது. இதனால் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் மைதானத்தில் காத்திருந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடந்தனர். ஆட்டம் கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com