சுரேஷ் ரெய்னா தேர்வு செய்த உலக லெவன் அணி.. தோனி, கோலிக்கு இடமில்லை

சுரேஷ் ரெய்னா தேர்வு செய்த உலக லெவன் அணியில் 4 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

மும்பை,

நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு பிளேயிங் லெவனை முன்னாள் மற்றும் இந்தாள் வீரர்கள் தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் இந்திய முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா வரலாற்றில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு ஆல்-டைம் சிறந்த உலக லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா தேர்வு செய்த அணியில் சச்சின், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் அனில் கும்ப்ளே ஆகிய 4 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால் அவரது அணியில் இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோரை தேர்வு செய்யாமல் ஆச்சரியமளித்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா தேர்வு செய்த உலக லெவன் அணி:

1. பிரையன் லாரா

2. சச்சின் தெண்டுல்கர்

3. விவியன் ரிச்சர்ட்ஸ்

4. கேரி சோபர்ஸ்

5. யுவராஜ் சிங்

6. இயன் போத்தம்

7. ஆண்ட்ரூ பிளின்டாப்

8. ஷேன் வார்னே

9. ஹர்பஜன் சிங்

10. அனில் கும்ப்ளே

11. சக்லைன் முஷ்டாக்

12. பால் ஆடம்ஸ் (இம்பேக்ட் வீரர்) 

X

Daily Thanthi
www.dailythanthi.com