உலக கிரிக்கெட்டுக்கு சூர்யவன்ஷி மிகப்பெரிய சொத்தாக இருப்பார்: முன்னாள் வீரர்

ஒரு போதும் மனதை தளரச் செய்யக்கூடாது. அவரை சரியாக வழிநடத்தினால் சூப்பர் ஸ்டாராக உருவெடுப்பார்.
உலக கிரிக்கெட்டுக்கு சூர்யவன்ஷி  மிகப்பெரிய சொத்தாக இருப்பார்: 
முன்னாள் வீரர்
Published on

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தனது யுடியுப் சேனலில் பேசுகையில் '15 வயதான சூர்யவன்ஷி நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக விளையாடுகிறார். அவரை நாம் ஊக்குவிக்க வேண்டும். ஒரு போதும் மனதை தளரச் செய்யக்கூடாது. அவரை சரியாக வழிநடத்தினால் சூப்பர் ஸ்டாராக உருவெடுப்பார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் பழைய பெருமையை கொண்டு வருவார். அவர் விளையாடுவதால் தான் அனைவரும் துலீப் கோப்பை போட்டியை இப்போது பார்க்கிறார்கள். என் மனைவி கூட அவர் விளையாடுவதால் தான் அந்த போட்டிகளை பார்க்கிறார். அரைஇறுதியில் அவரது பேட்டிங் பிரமாதமாக இருந்தது. ஆனாலும் உயரிய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அளவுக்கு அவரிடம் திறமை இருக்கிறதா என சிலர் ஏன் சந்தேகிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. கிரிக்கெட்டின் அனைத்து நிலைகளிலும் அவரால் ஜொலிக்க முடியும்.

எதிர்காலத்தில் உலக கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய சொத்தாக இருப்பார். விரைவில் உலக அளவில் அனைத்து வடிவிலான போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தப்போகிறார்' என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com