டி20 கிரிக்கெட்; மோசமான சாதனை பட்டியலில் இணைந்த அடில் ரஷித்

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்தில் வெற்றி பெற்றது.
Image Courtesy: @englandcricket / X (Twitter)
Image Courtesy: @englandcricket / X (Twitter)
Published on

பிரிஸ்டல்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றியது. தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 49 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக லுக் வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி, 18.3 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பட்லர் 47 ரன்கள் எடுத்தார்.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையிலும், அந்த அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் மோசமான சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். இந்த போட்டியில் அவர் மொத்தமாக 4 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்த நிலையில் 59 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார். அதிலும் குறிப்பாக 19-வது ஓவரில் மட்டும் மொத்தமாக 5 சிக்ஸர்கள் உள்பட 31 ரன்களைக் கொடுத்திருந்தார்.

இதன் காரணமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி தரப்பில் ஒரு ஓவரில் அதிக ரன்களைக் கொடுத்த வீரர் எனும் மோசமான சாதனை பட்டியலில் 2வது வீரராக இணைந்துள்ளார். முன்னதாக கடந்த 2007-ம் ஆண்டு ஸ்டீவர்ட் பிராட் இந்திய அணிக்கு எதிராக 36 ரன்களைக் கொடுத்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள நிலையில், தற்சமயம் ரஷித் 31 ரன்களைக் கொடுத்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com