டி20 கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

18.5 ஓவர்களில் இலக்கை கடந்து, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி
Published on: 

ராவல்பிண்டி,

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

டாஸ்

அதன்படி, பாகிஸ்தான், இலங்கை இடையேயான முதல் டி20 ராவல்பிண்டியில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதல் பேட்டிங் தேர்வு செய்தது.

இலங்கை 182 ரன்கள்

அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் தொடக்க வீரர் லஹிரு உதாரா அதிகபட்சமாக 91 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் தரப்பில் அந்த அணியின் நசீம் ஷா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பாகிஸ்தான் வெற்றி

இதனை தொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கி விளையாடியது. அந்த அணி 18.5 ஓவர்களில் இலக்கை கடந்தது. இதன் மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அதிகபட்சமாக கேப்டன் பர்ஹான் 89 ரன்களும், சதகத் 50 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com