டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சு தேர்வு

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

ஆண்டிகுவா,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

தற்போது சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது 2வது சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் வங்காளதேசத்தை இன்று எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகிவிடும்.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com