டி20 உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டி - மார்கோ ஜான்சன் அதிரடி...நியூசிலாந்துக்கு 170 ரன்கள் இலக்கு

தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.
டி20 உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டி - மார்கோ ஜான்சன் அதிரடி...நியூசிலாந்துக்கு 170 ரன்கள் இலக்கு
Published on

கொல்கத்தா,

2026 டி20 உலகக் கோப்பை தொடர் ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 போட்டி முடிவடைந்த நிலையில், இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அதே நேரத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டாவது அரையிறுதியில் சந்திக்கின்றன.

அதன்படி, முதல் அரையிறுதிப் போட்டி இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கான டாஸை வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் எய்டென் மார்க்ரம் களமிறங்கினர். இதில் டி காக் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் 10(8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். தொடர்ந்து களமிறங்கிய ரைன் ரிக்கெல்டனும் முதல் பந்திலே அவுட்டானார்.

பின்னர் மார்க்ரமுடன் பிரெவிஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆட அணியின் ஸ்கோர் 50-ஐ கடந்தது. இதற்கிடையில், மார்க்ரம் 18(20) ரன்களில் அவுட்டானார். பின்னர் வந்த மில்லரும் 6(6)ரன்களில் அவுட்டாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தார். ஒருபுறம் நிதானமாக ஆடிய பிரெவிஸும் 34(27) ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர் ஸ்டப்ஸ் மற்றும் ஜான்சன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அணியின் ஸ்கோர் 150-ஐ கடந்தநிலையில், ஸ்டப்ஸ் 29(24) ரன்களில் அவுட்டானார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய மார்கோ ஜான்சன் அரைசதம் கடந்து அசத்தினர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்கோ ஜான்சன் ஆட்டமிழக்காமல் 55(30)ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் கோல் மெகான்சி, மாட் ஹென்றி மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்க உள்ளது.

நியூசிலாந்து பிளேயிங் 11:

டிம் சைபர்ட் (விக்கெட் கீப்பர்), பின் ஆலன், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், மார்க் சேப்மேன், டேரில் மிச்சல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர்(கேப்டன்), கோல் மெகான்சி, மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன்

தென் ஆப்பிரிக்கா பிளேயிங் 11:

எய்டென் மார்க்ரம் (கேப்டன்), குவின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரைன் ரிக்கெல்டன், டெவால்ட் பிரெவிஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், கார்பின் போஷ், காகிசோ ரபாடா, கேஷவ் மகாராஜ், லுங்கி இங்கிடி

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, 8-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தென் ஆப்பிரிக்கா அணி இந்தத் தொடரில் தோல்வியே அடையாமல் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com