டி20 உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டி - டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, 8-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
டி20 உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டி - டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு
Published on

கொல்கத்தா,

2026 டி20 உலகக் கோப்பை தொடர் ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 போட்டி முடிவடைந்த நிலையில், இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவும் நியூசிலாந்தும் மோதுகின்றன. இப்போட்டி இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடக்கிறது.

Also Read
சந்திர கிரகணத்தின்போது பயிற்சியைத் தவிர்த்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்
டி20 உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டி - டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு

இரவு 7 மணிக்கு தொடங்கும் இப்போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, 8-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தென் ஆப்பிரிக்கா அணி இந்தத் தொடரில் தோல்வியே அடையாமல் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து பிளேயிங் 11:

டிம் சைபர்ட் (விக்கெட் கீப்பர்), பின் ஆலன், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், மார்க் சேப்மேன், டேரில் மிச்சல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர்(கேப்டன்), கோல் மெகான்சி, மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன்

தென் ஆப்பிரிக்கா பிளேயிங் 11:

எய்டென் மார்க்ரம் (கேப்டன்), குவின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரைன் ரிக்கெல்டன், டெவால்ட் பிரெவிஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், கார்பின் போஷ், காகிசோ ரபாடா, கேஷவ் மகாராஜ், லுங்கி இங்கிடி

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com