டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: விளையாடாமலேயே முன்னேறிய இந்திய வீரர்கள்

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக இந்தாண்டு தொடக்கத்தில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: விளையாடாமலேயே முன்னேறிய இந்திய வீரர்கள்
Published on

துபாய்,

இங்கிலாந்து - இலங்கை மற்றும் வங்காளதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர்கள் நிறைவு பெற்றுள்ளன. இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 4 இடங்களில் முறையே ஜோ ரூட், வில்லியம்சன், டேரில் மிட்செல் மற்றும் ஸ்டீவ் சுமித் ஆகியோர் உள்ளனர். 5-வது இடத்தில் இருந்த ஹாரி புரூக் 7 இடங்கள் பின்தங்கி 12-வது இடத்திற்கு சரிந்துள்ளார். இதன் மூலம் இந்திய வீரர்களான ரோகித், ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒரு இடம் முன்னேற்றம் கண்டு 5, 6 மற்றும் 7-வது இடங்களை பிடித்துள்ளனர்.

இந்திய வீரர்கள் கடைசியாக இந்தாண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மட்டுமே விளையாடினர். அதன் பின் டெஸ்டில் விளையாடவில்லை. இருப்பினும் சில வெளிநாட்டு வீரர்களின் சரிவால் இவர்கள் விளையாடாமலேயே முன்னேறியுள்ளனர்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அஸ்வின் முதலிடத்தில் தொடருகிறார். ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் 2-வது இடத்திலும் தொடருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com