டெஸ்ட் கிரிக்கெட்; விராட் கோலியின் இடத்திற்கு சரியான வீரர் யார்..? - புஜாரா பதில்

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி நேற்று அறிவித்தார்.
image courtesy: PTI
image courtesy: PTI
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார்.

மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாகவும் வரலாறு படைத்துள்ளார். அந்த சூழலில் தற்போது ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி விளையாடி வந்த 4வது இடத்தில் யார் விளையாடுவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. தற்போது இந்த கேள்விக்கு சீனியர் வீரரான புஜாரா பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்த இடத்தில் (4வது இடம்) பேட்டிங் செய்வதற்கு யார் சரியாக இருப்பார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்கு நமக்கு குறைந்தது இரண்டு தொடர்களாவது தேவைப்படும். ஏனென்றால், இது மிகவும் முக்கியமான இடம்.

மேலும், உங்களுடைய சிறந்த பேட்டர் இந்த இடத்தில் விளையாட வேண்டியது அவசியம். எனவே, சிறந்த பேட்டர் யார் என்பதை தீர்மானிக்க வேண்டிய இடத்தில் இந்திய அணி நிர்வாகம் இருக்கிறது. மேலும், விளையாடும் அணியில் இடம் பிடிப்பதற்கு தற்போது பலவீரர்கள் இருக்கிறார்கள். தற்போது யாருக்கும் இடங்கள் உறுதியானதாக இல்லை. இது ஒரு செயல்முறை. எனவே, இந்த இடத்திற்கு யார் சரியான வீரர் என்பதை கண்டறிவதற்கு நிச்சயம் நேரம் எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com