

புதுடெல்லி,
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி நேற்று அளித்த ஒரு பேட்டியில், 'என்னை பொறுத்தமட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி தான் இந்தியாவுக்காக நான் விளையாடப்போகும் கடைசி உலகக் கோப்பை தொடராகும். நிச்சயமாக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எங்கள் இலக்காகும். கோப்பையை வெல்ல களத்தில் எனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்த தயாராக இருக்கிறேன்' என்று தெரிவித்தார்.
உலகக் கோப்பை தொடரில் ஆடுவது என்பது தனித்துவமான சவால் நிறைந் ததாகும். அதற்கு வித்தியாசமான முறையில் ஆயத்தமாக வேண்டும். அந்த சவாலை சந்திக்க தயாராக உள்ளேன்' என்று மற்றொரு சீனியர் வீரரான ரோகித் சர்மா கூறினார்.
20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்ட 37 வயது விராட் கோலி, 39 வயது ரோகித் சர்மா ஆகியோர் ஒருநாள் போட்டியில் மட் டும் விளையாடி வருகிறார்கள். 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2027) அக்டோபர், நவம்பர் மாதங்களில் தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமிபியா ஆகிய நாடுகளில் நடக்கிறது.