டிஎன்பிஎல்: 2 ரன்களில் சதத்தை தவறவிட்ட ஆஷிக்... திருப்பூருக்கு 206 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சேப்பாக்

ஆஷிக்கின் அதிரடி ஆட்டம் சேப்பாக் அணிக்கு வலுவான ஸ்கோரை பெற்றுத் தந்துள்ளது.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் சேப்பாக் அணியின் ஆஷிக் 2 ரன்களில் சதத்தை தவறவிட்டார்.
Published on

நத்தம்,

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் சேப்பாக் அணியின் ஆஷிக் 2 ரன்களில் சதத்தை தவறவிட்டார்.

டாஸ்

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்று வரும் 10-வது டிஎன்பிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

2 ரன்களில் சதம் நழுவியது

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் அணிக்கு கே. ஆஷிக் அபாரமாக விளையாடி 56 பந்துகளில் 98 ரன்கள் குவித்தார். சதம் அடிக்க இன்னும் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

205 ரன்கள் குவித்த சேப்பாக்

மேலும், நாராயண் ஜெகதீசன் 27 ரன்களும், அஷ்வந்த் வல்தப்பா ஆட்டமிழக்காமல் 28 ரன்களும் எடுத்தனர். இதன் உதவியுடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 206 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி விளையாட உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com