

திண்டுக்கல்,
10வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் முதற்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற உள்ள 14வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - சேப்பாக்க சூப்பர் கில்லீஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற சேப்பாக்க சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் நாராயண் ஜெகதீசன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.