டிஎன்பிஎல் கிரிக்கெட் - திண்டுக்கல்லுக்கு எதிராக டாஸ் வென்ற நெல்லை பந்துவீச்சு தேர்வு

திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 2-வது லீக் ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
Published on

நத்தம்,

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 2-வது லீக் ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

டி.என்.பி.எல்

10-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

டாஸ்

இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டதில், நெல்லை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

2-வது வெற்றியை நோக்கும் அணிகள்

இந்த தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதேபோல், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி திருப்பூர் தமிழன்ஸை தோற்கடித்து வெற்றி கணக்கை தொடங்கியது. இதனால், இரு அணிகளும் தொடர்ச்சியாக 2-வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் களமிறங்குகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com