டிஎன்பிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற சேலம் அணி பந்து வீச்சு தேர்வு

டாஸ் வென்ற சேலம் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, கோவை அணி பேட்டிங் செய்து வருகிறது.
டிஎன்பிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற சேலம் அணி பந்து வீச்சு தேர்வு
Published on

10-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக் கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய 4-வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற சேலம் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, கோவை அணி பேட்டிங் செய்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com