டிஎன்பிஎல் - திருச்சிக்கு எதிராக டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சு தேர்வு

இன்று நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் - திருச்சி அணிகள் மோதுகின்றன.
இன்றைய லீக் ஆட்டத்தில் திருச்சிக்கு எதிராக டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
Published on

சென்னை,

இன்றைய லீக் ஆட்டத்தில் திருச்சிக்கு எதிராக டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

டிஎன்பிஎல்

10-வது டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொட ரின் முதற்கட்ட ஆட்டங்கள் திண்டுக்கல் நத்தத்தில் நிறைவடைந்த நிலையில், இதன் 2-வது கட்ட ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற் றுக்கு தகுதி பெறும்.

டாஸ்

இன்று நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல்-திருச்சி அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, திருச்சி அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com