டிஎன்பிஎல்: கோவை 239 ரன்கள் குவிப்பு

டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
டிஎன்பிஎல்: கோவை 239 ரன்கள் குவிப்பு
Published on

திண்டுக்கல்,

10வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்று வரும் 7வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

239 ரன்கள் குவிப்பு

இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 239 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய அந்த அணியின் கேப்டன் சித்தார்த் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் குவித்தார். அதேபோல், பாலசுப்பிரமணியன் 84 ரன்கள் குவித்தார்.

மதுரை தரப்பில் அந்த அணியின் குர்ஜப்நீத் சிங் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மதுரை களமிறங்கி விளையாடி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com