டிஎன்பிஎல் - திருச்சியை வீழ்த்தி மதுரை திரில் வெற்றி

திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது.
டிஎன்பிஎல்
Published on

நத்தம்,

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மதியம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மதுரை வெற்றி பெற்றது.

டிஎன்பிஎல்

10-வது டிஎன்பிஎல் (TNPL) 20 ஓவர் கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

டாஸ் வென்ற மதுரை

இன்று (புதன்கிழமை) 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி, மதியம் நடந்த முதல் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸை வென்ற மதுரை பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது.

174 ரன்கள் இலக்கு

தொடர்ந்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணி, தொடக்கத்தில் தடுமாறினாலும் பின்னர் கிரண் கார்த்திகேயன் (38), என்.எஸ். சதுர்வேத் (27), பி. சரவணன் (ஆட்டமிழக்காமல் 26), குர்ஜப்நீத் சிங் (ஆட்டமிழக்காமல் 21) ஆகியோரின் அதிரடியால் இலக்கை நெருங்கியது.

மதுரை திரில் வெற்றி

இறுதியில் 19.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டிய மதுரை , 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com