டிஎன்பிஎல் - நெல்லைக்கு 199 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மதுரை

ஷோயப் , அத்தீக் அரைசதம் கடந்து அசத்தினர்.
இன்று நடைபெற்று வரும் 28-வது லீக் ஆட்டத்தில் நெல்லைக்கு 199 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது மதுரை.
Published on

சென்னை,

28-வது லீக் ஆட்டத்தில் நெல்லைக்கு 199 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது மதுரை.

டிஎன்பிஎல்

8 அணிகள் பங்கேற்றுள்ள 10வது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இத்தொடரின் முதல்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தொடரின் 2ம் கட்ட போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நெல்லை-மதுரை

அதன்படி, டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் 28-வது லீக் ஆட்டத்தில் நெல்லை-மதுரை அணிகள் மோதி வருகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

மழை குறுக்கீடு

அதன்படி, களமிறங்கிய மதுரை அணிக்கு ஆரம்பம் எதிர்பார்த்தவகையில் அமையவில்லை. தொடக்க வீரர் ராம்குமார் ரன் ஏதும் எடுக்காமலும், சித்தார்த் 19, சத்ருவேத் 12 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதையடுத்து ஹரி ராகவேந்திரா - ஷோயப் கான் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் நிதாமாக ஆடி ரன் குவித்தனர். அப்போது 9.1 ஓவர்கள் முடிந்திருந்தநிலையில், ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டநிலையில் பின்னர் மீண்டும் துவங்கியது.

199 ரன்கள் இலக்கு

அப்போது ஹரி ராகவேந்திரா 35(29) ரன்கள் எடுத்தநிலையில் அவுட்டானார். இதையடுத்து ஷோயப்புடன் அத்தீக் கைக்கோர்த்தார். இருவரும் அதிரடியாக ஆட ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விகெட்டுகளை இழந்து மதுரை 198 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்க உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com