டி.என்.பி.எல்.: கோவைக்கு எதிராக டாஸ் வென்ற நெல்லை பந்துவீச்சு தேர்வு


டி.என்.பி.எல்.: கோவைக்கு எதிராக டாஸ் வென்ற நெல்லை பந்துவீச்சு தேர்வு
x

image courtesy:twitter/@TNPremierLeague

முதல் 2 கட்ட லீக் ஆட்டங்கள் கோவை மற்றும் சேலத்தில் நடைபெற்றது

நெல்லை,

9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். தொடர்ந்து 5 ஆட்டங்களில் வெற்றியை ருசித்த 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மட்டும் 'பிளே-ஆப்' சுற்றை உறுதி செய்திருக்கிறது. மற்ற அணிகள் போராடுகின்றன.

இதில் முதல் இரு கட்ட லீக் ஆட்டங்கள் கோவை மற்றும் சேலத்தில் நடைபெற்றது. போட்டியில் நேற்று ஓய்வு நாளாகும். இந்த நிலையில் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லை சங்கர் நகரில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.

இதில் இன்றிரவு நடக்கும் 18-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி கோவை முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

1 More update

Next Story