டிஎன்பிஎல்: மதுரை அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெல்லை ராயல் கிங்ஸ்

நெல்லை ராயல் கிங்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
image tweeted by @TNPremierLeague
image tweeted by @TNPremierLeague
Published on

திண்டுக்கல்,

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் நடந்தது. அடுத்தகட்ட லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இன்று இரவு 7.15 மணிக்கு தொடங்கிய 10-வது ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதலே நெல்லை அணி அதிரடியாக விளையாடியது.அந்த அணியின் நிரஞ்சன் 47 ரன்களும்,பாபா அபரஜித் 34 ரன்களும் எடுத்த்னர். கடைசி சில ஓவர்களில் சஞ்சய் யாதவ், பாபா இந்திரஜித் இருவரும் பவுண்டரி ,சிக்ஸர் விளாசினர். அதிரடியாக விளையாடிய சஞ்சய் யாதவ் அரைசதம் அடித்தார்.

இறுதியில் நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.சஞ்சய் யாதவ் 42 பந்துகளில் 70 ரன்களும் ,பாபா இந்திரஜித் 18 பந்துகளில் 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.தொடர்ந்து 219 ரன்கள் இலக்குடன் மதுரை அணி விளையாடியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான அருண் கார்த்திக் ஒருபுறம் போராட, மறுபுறம் வந்த வேகத்தில் பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பினர். கேப்டன் சதுர்வேர் சிறிது நேரம் விளையாடி 27 ரன்கள் எடுத்தார். ஆனால் அவரால் நிலைத்து விளையாட முடியவில்லை.

அருண் கார்த்திக் தனி ஆளாக போராடி சதம் அடித்தும், அவரால் அணியை வெற்றிக்கு அருகில் மட்டுமே கொண்டு வர முடிந்தது. கடைசியில் அவரும் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இறுதியில் மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் நெல்லை அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com