

திண்டுக்கல்,
10வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் இன்று மாலை நடைபெற உள்ள 9வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோத உள்ளன.
ஆட்டம் 3.30 மணிக்கு தொடங்க இருந்த நிலையில் மைதானம் அமைந்துள்ள பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் ஆட்டம் தாமதமாகியுள்ளது. மழையால் இப்போட்டிக்கான டாஸ் இன்னும் சுண்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.