

சென்னை,
10-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் மழை குறுக்கிட்டுள்ளது.
இந்த போட்டிக்கான டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
திருச்சி அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை பெய்ததால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அணியின் தொடக்க வீரர் கே. ராஜ்குமார் 13 பந்துகளில் 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். மற்றொரு தொடக்க வீரர் ஜெயராமன் சுரேஷ் குமார் 5 பந்துகளில் 1 ரன் எடுத்துள்ளார்.
ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மழை நின்றதும் ஆடுகளம் தயார் செய்யப்பட்டு, போட்டி மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10-வது டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதற்கட்ட ஆட்டங்கள் திண்டுக்கல் நத்தத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், 2-வது கட்ட ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று தொடங்கின.
இந்த தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.