டிஎன்பிஎல்: சேலம் அணி 182 ரன்கள் குவிப்பு

சேலம் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.


டிஎன்பிஎல்: சேலம்  அணி 182 ரன்கள் குவிப்பு
Published on

திண்டுக்கல்,

10வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் முதற்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற உள்ள 14வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - சேப்பாக்க சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற சேப்பாக்க சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் நாராயண் ஜெகதீசன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் சேப்பாக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சேலம் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழ்ந்தனர். சேலம் அணியில் அதிரடியாக விளையாடிய ஹரிஷ் குமார் அரைசதம் அடித்தார். பொறுப்புடன் விளையாடி ஈஸ்வர் 39 ரன்கள், பூபதி குமார் 30 ரன்கள் எடுத்தனர். சேலம் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com