

சென்னை,
10-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் 2-வது கட்டப் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் மதுரை பேந்தர்ஸ் அணிக்கு எதிரான 23-வது லீக் போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. திருப்பூர் தரப்பில் குர்ஜப்நீத் சிங் மற்றும் அஜய் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தொடர்ந்து 158 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் அணி, 17.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. பிரதோஷ் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதுடன், ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
இதன் மூலம் திருப்பூர் அணி 14 பந்துகள் மீதமிருந்த நிலையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.