டிஎன்பிஎல்: திருச்சி அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருப்பூர் பந்துவீச்சு தேர்வு..!

திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற, திருப்பூர் தமிழன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
image courtesy: TNPL twitter
image courtesy: TNPL twitter
Published on

நெல்லை,

6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், லைகா கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில், நெல்லையில் இன்று நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற, திருப்பூர் தமிழன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து திருச்சி வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com