

சென்னை,
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2026 தொடரின் 26-வது லீக் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி, சேப்பாக் சூப்பர் கில்லீஸை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற திருச்சி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது. திருச்சி அணியின் சஞ்சய் யாதவ் சிறப்பாக விளையாடி 40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார்.
192 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் திருச்சி அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.