டி.என்.பி.எல்.: திருச்சி கிராண்ட் சோழாஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் இன்று மோதல்

இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
Image Courtesy: @TNPremierLeague
Image Courtesy: @TNPremierLeague
Published on

சேலம்,

8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன.

இந்நிலையில், தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதன்படி மாலை 3.15 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோத உள்ளன.

இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் திருப்பூர் அணி 3 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 2 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் திருச்சி அணி ஆடிய 2 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

இந்த ஆட்டத்தில் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. தொடர்ந்து இரவு 7.15 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com