இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் முதல் ஒருநாள் போட்டி: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் முதல் ஒருநாள் போட்டி: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்
Published on

தர்மசாலா,

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான ஒரே டெஸ்ட் போட்டி கடந்த 6ம் தேதி தொடங்கியது. அதில் இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

முதல் ஒருநாள் போட்டி

தற்போது இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. இமாச்சலபிரதேச மாநிலம் தரம்சாலாவில் இன்று மதியம் 1.30 மணிக்கு ஆட்டம் தொடங்க இருந்தநிலையில், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com