சுரேஷ் ரெய்னா, டிராவிஸ் ஹெட் சாதனை முறியடிப்பு... வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி

ஐபிஎல்லில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வைபவ் சூர்யவன்ஷி 15 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
சுரேஷ் ரெய்னா, டிராவிஸ் ஹெட் சாதனை முறியடிப்பு... வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி
Published on

சென்னை,

ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் அணி, சென்னை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிரடி வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியது.

கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் சென்னை அணி பேட்டிங் செய்தது. ராஜஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாதநிலையில் 19.4 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 12.1 ஓவர்களில் ராஜஸ்தான் அணி இலக்கை எட்டியது.

Also Read
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்விக்கான காரணம் என்ன? - சென்னை கேப்டன் ருதுராஜ்
சுரேஷ் ரெய்னா, டிராவிஸ் ஹெட் சாதனை முறியடிப்பு... வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி

இதில் சிறப்பாக ஆடிய இளம் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் மூலம், சுரேஷ் ரெய்னா, அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், டிராவிஸ் ஹெட் ஆகியோர் 16 பந்துகளில் பதிவு செய்திருந்த வேகமான அரைசதம் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

இது ஐபிஎல் வரலாற்றில் ஒட்டுமொத்தமாக 3-வது அதிவேக அரைசதம் ஆகும். முதலிடத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (13 பந்துகள்) உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com