28 பந்துகளில் சதம்... உலக சாதனை படைத்த வைபவ் சூரியவன்ஷி

முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி 50 ஓவர்கள் முடிவில் 249/8 ரன்கள் எடுத்தது.
வைபவ் சூரியவன்ஷி
Published on: 

தோஹா,

இந்திய கிரிக்கெட்டின் இளம் அதிரடி வீரர் வைபவ் சூரியவன்ஷி, வெறும் 28 பந்துகளில் சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ஜேக் ப்ரேசர்-மெக்குர்க்கின் சாதனை முறியடிப்பு

இதற்கு முன்பு லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனை ஆஸ்திரேலிய வீரர் ஜேக் ப்ரேசர்-மெக்குர்க் வசம் இருந்தது. அவர் 2023-24 மார்ஷ் ஒருநாள் கோப்பைத் தொடரில் தெற்கு ஆஸ்திரேலியா அணிக்காக டாஸ்மானியா அணிக்கு எதிராக 29 பந்துகளில் சதம் அடித்திருந்தார். தற்போது அந்த சாதனையை வைபவ் முறியடித்துள்ளார்

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக அதிரடி

தோஹாவில் நடைபெற்றுவரும் ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி 50 ஓவர்கள் முடிவில் 249/8 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கய இந்தியா 'ஏ' அணிக்கு அபிஷேக் சர்மா 12(5) ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து பிரப் சிம்ரன் சிங் 3(4) ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

மறுபுறம் அதிரடி காட்டிய வைபவ் 28 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். தற்போது இந்திய அணி 9 ஓவர்கள் முடிவில் 162/2 ரன்கள் எடுத்துள்ளது. வைபவ் 135 ரன்களுடனும் , ரிங்கு சிங் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

X