

மும்பை,
அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, முதல் டி20 ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் குவித்தது.155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் அயர்லாந்து கைப்பற்றி இந்தியாவுக்கு எதிராக முதல் முறையாக டி20 தொடரை வென்று புதிய வரலாறு படைத்தது. இந்த நிலையில், 2 போட்டிகளிலும் இந்திய அணியில் இடம் பெற்ற இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கவில்லை.
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி தயாராக இருக்கிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அறிமுக வாய்ப்பை பெறுவதற்கு அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு பின்பற்றிய அதே நடைமுைைறைய அவரும் கடந்து வர வேண்டும். தனக்குரிய சரியான வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரையான் டென்சஸ்சாட் கூறியுள்ளார்.