ஒரே ஆட்டத்தில் சிதறிய உலக சாதனைகள்... சரித்திரம் படைத்த 'கிங்' கோலி

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி அடுத்தடுத்து பல உலக சாதனைகளை படைத்துள்ளார்.
ஒரே ஆட்டத்தில் சிதறிய உலக சாதனைகள்... சரித்திரம் படைத்த 'கிங்' கோலி
Published on

தர்மசாலா,

ஐபிஎல் வரலாற்றின் மிகச்சிறந்த வீரர் தான் என்பதை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 61-வது லீக் போட்டியில், விராட் கோலி அடுத்தடுத்து பல உலக சாதனைகளை படைத்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட எதிரணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த பேட்டர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அவரே வைத்திருந்த சாதனையை முறியடித்து, தற்போது பஞ்சாப் அணிக்கு எதிராக 1175* ரன்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

1217 - விராட் கோலி (vs பஞ்சாப் )

1174 - விராட் கோலி (vs சென்னை )

1172 - விராட் கோலி (vs டெல்லி)

1161 - ரோஹித் சர்மா (vs கொல்கத்தா)

1134 - டேவிட் வார்னர் (vs பஞ்சாப்)

அடுத்ததாக, ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணிக்காக தொடக்க வீரராக களம் இறங்கி 5,500 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை கோலி எட்டினார். இப்போட்டிக்கு முன்னதாக இந்த மைல்கல்லை எட்ட அவருக்கு 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஷிகர் தவன், டேவிட் வார்னர் ஆகியோர் 5500 ரன்களை கடந்திருந்தாலும், அவர்கள் பல அணிகளுக்காக ஆடியுள்ளனர். ஆனால், கோலி ஒரே அணிக்காக ஆடி இந்த சாதனையை செய்துள்ளார்.

Also Read
ஐபிஎல் பிளே ஆப் ரேஸ்: மூன்றே இடங்கள்... மோதிக்கொள்ளும் 7 அணிகள்
ஒரே ஆட்டத்தில் சிதறிய உலக சாதனைகள்... சரித்திரம் படைத்த 'கிங்' கோலி

தொடர்ந்து, ஐபிஎல் வரலாற்றில் வெவ்வேறு சீசன்களில் 500-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்த ஒரே வீரர் என்ற அசாத்திய சாதனையை கோலி படைத்துள்ளார்.

9 சீசன்கள் - விராட் கோலி

7 சீசன்கள் - டேவிட் வார்னர், கே.எல். ராகுல்

5 சீசன்கள் - ஷிகர் தவன்

மேலும், தொடர்ச்சியாக 4 ஐபிஎல் சீசன்களில் 500-க்கும் மேல் ரன்கள் அடித்து, கிறிஸ் கெய்ல் மற்றும் ஷிகர் தவன் ஆகியோரின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.

6 சீசன்கள் - டேவிட் வார்னர் (2014-17, 2019-20)

5 சீசன்கள் - கே.எல். ராகுல் (2018-2022)

4 சீசன்கள் - விராட் கோலி (2023-2026)

இறுதியாக, நடப்பு 2026 சீசனில் அதிக முறை 50+ ரன்கள் அடித்தவர்கள் பட்டியலிலும் கோலி டாப் இடங்களுக்கு முன்னேறியுள்ளார்.

சாய் சுதர்சன் 7 முறை

கிளாசென் 5 முறை

ஸ்ரேயாஸ் ஐயர் 5 முறை

பிரப்சிம்ரன் சிங் 5 முறை

ரகுவன்ஷி 5 முறை

சுப்மன் கில் 5 முறை

விராட் கோலி 5 முறை

முப்பது வயதைக் கடந்தும் இளம் வீரர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் விராட் கோலி காட்டி வரும் இந்த ஆட்டம், ஆர்சிபி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com