

விசாகப்பட்டினம்,
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் கோலி சதமடித்து அசத்தினார்
இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சதமடித்து அசத்தினார். கோலி 88 பந்துகளில் 139 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதில் 10 பவுண்டரியும், 9 சிக்சரும் அடங்கும். கோலியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி எளிதில் வெற்றிபெற்றது.
இந்த ஆட்டத்தில் 61 ரன் எடுத்த போது, சர்வதேச ஒரு நாள் போட்டியில் கோலி 15 ஆயிரம் ரன்களை கடந்தார். இந்த மைல் கல்லை எட்டிய 2-வது வீரர் ஆவார். மொத்தமாக 315 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 55 சதம், 79 அரைசதம் உள்பட 15,080 ரன்கள் குவித்துள்ளார். முதலிடத்தில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கரும் (18,426 ரன்) 3-வது இடத்தில் இலங்கையின் சங்கக்கராவும் (14.234 ரன்) உள்ளது குறிப்பிடத்தக்கது.