உத்தரபிரதேசத்தில் ஆன்மிக குரு மகராஜியிடம் ஆசி பெற்ற விராட் கோலி

பெங்களூரு அணிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் ஆன்மிக குரு மகராஜியிடம்  ஆசி பெற்ற விராட் கோலி
Published on

பெங்களூரு,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஆமதாபாத்தில் நடந்த இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயித்த 156 ரன் இலக்கை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்.சி.பி.) அணி 18 ஓவர்களில் எட்டிப்பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது. விராட் கோலி 75 ரன்கள் (42 பந்து, 9 பவுண் டரி, 3 சிக்சர்) எடுத்து ஆட்டநாயகனாக ஜொலித்தார்.தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை உச்சிமுகர்ந்த பெங்களூரு அணிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சாம்பியன் பட்டம் வென்றதும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வீரர் விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே பிருந்தாவனத்தில் உள்ள ராதா கேளி குஞ்ச் ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு ஆன்மிக குரு பிரேமானந்த் மகராஜியிடம் ஆசி பெற்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com