டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் அவரை கண்டிப்பாக மிஸ் செய்கிறோம் - ஜடேஜா பேட்டி

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
Image Courtesy: @BCCI
Image Courtesy: @BCCI
Published on

அகமதாபாத்,

ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. அதன்படி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்தது.

இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 10ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் ஆட்டநாயகன் ரவீந்திர ஜடேஜா அளித்த பேட்டியில் கூறியதாவது, டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் அஸ்வினை கண்டிப்பாக மிஸ் செய்கிறோம். பல ஆண்டாக இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

அவர் போட்டியை வென்று கொடுப்பவர். டெஸ்ட் போட்டிகளின்போது அஸ்வின் பந்து வீச வேண்டும் என தோன்றும். ஆனால் அவர் அணியில் இல்லை என்பதை உணர்வேன் என உருக்கமாகத் தெரிவித்தார்.எதிர்காலத்தில் என்னுடைய இடத்துக்கு வேறு ஒரு வீரர் வருவார். இது கண்டிப்பாக நடக்கும் என தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com