

ஐதராபாத்,
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நேற்றிரவு அரங்கேறியது. 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட்டுக்கு 247 ரன்கள் குவித்தது. ஷாய் ஹோப் 102 ரன்களுடனும் (50 பந்து, 4 பவுண்டரி, 9 சிக்சர்), ரூதர்போர்டு 49 ரன்களுடனும் (26 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர். பின்னர் 248 ரன் இலக்கை நோக்கி இந்திய அணி 19.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சாளர் கீமோபால் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
வெற்றி தொடர்பாக பேசிய வெஸ்ட் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் கூறியதாவது,
தொடர்ந்து ஆட்டநாயகன் விருதுகளை வெல்வது மகிழ்ச்சி. அந்த விருதுகளைத் தாய்நாட்டுக்குக் கொண்டு செல்வதில் சற்று சிரமம். விருதுகள் சற்று கனமாக இருப்பதால், பயணத்தின்போது லக்கேஜ் எடை தொடர்பாகப் பிரச்சினைகள் ஏற்படலாம். அணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதே தனது முக்கிய நோக்கம். தொடக்கத்தில் 50 ரன்களுக்கும் அதிகமான பார்ட்னர்ஷிப் அமைந்தது அணிக்குச் சாதகமாக இருந்தது, அதன் மூலம் மிடில் ஓவர்களில் மற்ற வீரர்கள் சுதந்திரமாக விளையாட முடிந்ததது. ஆடுகளம் தாங்கள் எதிர்பார்த்ததைவிடச் சற்று மெதுவாகச் செயல்பட்டது. புதிய பந்தில் சில பந்துகள் அதிகமாக எகிறியதுடன், சில பந்துகள் தாழ்வாகவும் வந்தன. இதனால், தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்வதும், கடைசி ஓவர்களில் சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ரன்கள் சேர்ப்பதும் சவாலாக இருந்ததாது. இதன் காரணமாக, 240 ரன்களுக்கு மேல் எடுத்தது நல்ல ஸ்கோர் என்றும் அவர் தெரிவித்தார்.என தெரிவித்தார்.