

பார்படோஸ்,
உலக கிரிக்கெட் அரங்கின் தலைச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான கேரி சோபர்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) பார்படோசில் உள்ள தனது இல்லத்தில் நேற்று மரணம் அடைந்தார். அவரது வயது 89. டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 17 வயதில் அறிமுகம் ஆன கேரி சோபர்ஸ் 93 டெஸ்டுகளில் விளையாடி 26 சதங்கள் உள்பட 8,032 ரன்கள் எடுத்துள்ளார். 1958-ம் ஆண்டு கிங்ஸ்டனில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 365 ரன்கள் குவித்த போது. டெஸ்டில் தனிநபரின் அதிகபட்ச ஸ்கோர் சாதனையாக 1994-ம் ஆண்டு வரை நீடித் தது. இடக்கை வேகப்பந்து வீச்சாளரான அவர், சுழற்பந்தும் வீசுவதில் கெட்டிக்காரர். 235 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். அத்துடன் 109 கேட்ச்சும் செய்துள்ளார்.
முதல்தர கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 6 பந்துகளில் 6 சிக்சர் விளாசிய முதல் வீரர் என்ற சிறப்புக்குரியவர். 1968-ம் ஆண்டில் கிளாமோர்கனுக்கு எதிரான ஆட்டத்தில் நாட்டிங் காம்ஷைர் அணிக்காக இச்சாதனையை படைத்தார். ஒரு நாள் கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் ஒரே ஒரு ஆட்டத் தில் மட்டுமே விளையாடியுள்ளார். கிரிக்கெட்டுக்கு அவர் அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை அவரது பெயரில் வழங்கி வருகிறது.