முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அபார பந்து வீச்சு... வங்காளதேசம் தடுமாற்றம்

டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அபார பந்து வீச்சு... வங்காளதேசம் தடுமாற்றம்
Published on: 

டாக்கா,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்டில் 3ம் நாள் ஆட்டநேர முடிவில் வங்காளதேசம் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் டெஸ்ட்

வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 28ம் தேதி தொடங்கியது. வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

வங்காளதேசம் 272 ரன்கள்

அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 272 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஷதிமென் இஸ்லாம் அதிகபட்சமாக 105 ரன்கள் குவித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அந்த அணியின் ஜோமல் வாரிகன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வெஸ்ட் இண்டீஸ் 245 ரன்கள்

இதனை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் டேகனரைன் சந்தரபால் அதிகபட்சமாக 56 ரன்கள் சேர்த்தார். வங்காளதேச தரப்பில் நயீம் ஹசன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வங்காளதேசம் 79/6

இதையடுத்து, 27 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசத்திற்கு அதிர்ச்சி காத்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் சிறப்பான பந்து வீச்சால் வங்காளதேச வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

அதன்படி, 3ம் நாள் ஆட்டநேர முடிவில் வங்காளதேசம் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் ஜகர் அலி, நயீம் ஹசன் தலா 18 ரன்களுடன் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் சேஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2வது இன்னிங்சில் வங்காளதேசம் 106 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்று தடுமாறி வருகிறது.

ஆட்டத்தில் இன்னும் 2 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் வங்காளதேசம் கைவசம் இன்னும் 4 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி வலுவான நிலையில் உள்ளது.

X