டெஸ்ட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணி சாதனை: ஐ.சி.சி. புகழாரம்

டெஸ்ட் வரலாற்றிலேயே 4வது இன்னிங்சில் அதிக ரன்களை சேசிங் செய்து 5வது முறையாக வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வாழ்த்துகள் குவிந்துள்ளன.
டெஸ்ட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணி சாதனை: ஐ.சி.சி. புகழாரம்
Published on

புதுடெல்லி,

வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேச நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்டில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 430 மற்றும் 2வது இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்களும் எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 259 ரன்கள் எடுத்தது. 2வது இன்னிங்சில் 395 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடியது. கடைசி நாளில் அந்த அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர்.

வெஸ்ட் இண்டீசில் அறிமுக வீரராக விளையாடிய கைலே மேயர்ஸ் ஆட்டமிழக்காமல் 210 ரன்களை குவித்து அணி வெற்றிக்கு உதவி புரிந்துள்ளார்.

இதனால், வெஸ்ட் இண்டீஸ் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. டெஸ்ட் வரலாற்றில் 4வது இன்னிங்சில் அதிக ரன்களை சேசிங் செய்து 5வது முறையாக வெற்றி பெற்றதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வாழ்த்துகள் குவிந்துள்ளன.

இதுபற்றி ஐ.சி.சி. வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கைலே மேயர்சின் 210 நாட் அவுட், அந்த அணி வங்காளதேச அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வழிகாட்டியுள்ளது. டெஸ்ட் வரலாற்றில் 5வது முறையாக 4வது இன்னிங்சில் அதிக ரன்கள் வெற்றிகரமுடன் சேசிங் செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

இதேபோன்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் பேட்ஸ்மேன் விவியன் ரிச்சர்ட்ஸ் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com