வெஸ்ட் இண்டீஸ் தொடர்: கேரளா வந்தடைந்தார் ரோகித் சர்மா

இந்தத் தொடரில் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுகிறார்.
வெஸ்ட் இண்டீஸ் தொடர்: கேரளா வந்தடைந்தார் ரோகித் சர்மா
Published on

திருவனந்தபுரம்,

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா கேரளா வந்தடைந்துள்ளார். அவர் இன்று திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்தார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் செப்டம்பர் 27-ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுகிறார்.

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ரோகித் சர்மாவுக்கு முன்னதாக விராட் கோலி நேற்று திருவனந்தபுரம் வந்தடைந்தார். இதனால் ரோகித் - கோலி இருவரும் மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் இணைந்து களமிறங்குவதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

கிரீன்ஃபீல்டு மைதானத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டுகள் மிக வேகமாக விற்றுத் தீர்ந்துள்ளன. ரோகித், கோலி இருவரும் களமிறங்க இருப்பது போட்டிக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com