மகளிர் டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீசுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது
மகளிர் டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீசுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து
Published on

லண்டன்,

10வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ்

இதில் சவுத்ஹாம்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 4வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மோதுகின்றன. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் அந்த அணியின் புரோகி ஹலிடே 40 ரன்களும், இசபெல் கசி 39 ரன்களும், மெடி கிரீன் 35 ரன்களும் சேர்த்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அந்த அணியின் எலினி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கி விளையாட உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com