"வைபவ் எப்போது அறிமுகம்?" - கேள்வியை நிறுத்துங்கள்... புஜாரா வேண்டுகோள்

"வைபவ் சூர்யவன்ஷி எப்போது இந்திய அணிக்காக அறிமுகமாகிறார்?" என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகமாக எழுந்து வருகிறது.
வைபவ் சூர்யவன்ஷி
Published on

மும்பை,

வைபவ் குறித்த கேள்வியை நிறுத்த வேண்டும் என்று இந்திய முன்னாள் வீர புஜாரா வேண்டுகோள்விடுத்துள்ளார்.

வாய்ப்பு கிடைக்காத வைபவ் சூர்யவன்ஷி

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. இந்திய அணியில் இடம் பெற்றிருந்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஒரு போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதைத்தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியிலும் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

தொடரும் கேள்விகள்

இந்திய அணியில் இடம்பெற்றிருந்தாலும், தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால், "வைபவ் சூர்யவன்ஷி எப்போது இந்திய அணிக்காக அறிமுகமாகிறார்?" என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகமாக எழுந்து வருகிறது.

புஜாரா என்ன சொல்கிறார்?

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சேதேஷ்வர் புஜாரா, வைபவ் குறித்த கேள்வியை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இடம் பிடித்ததே பெரிய சாதனை

இதுகுறித்து பேசிய புஜாரா,

"வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் எப்போது அறிமுகமாவார் என்று தொடர்ந்து கேட்பதை நிறுத்துங்கள். வெறும் 15 வயதிலேயே இந்திய அணியில் இடம் பெற்றிருப்பதே மிகப்பெரிய சாதனை. ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை என்றாலும், தினமும் மூத்த வீரர்களுடன் பயிற்சி செய்வது, சிறந்த பயிற்சியாளர்களிடம் இருந்து ஆலோசனைகள் பெறுவது, இங்கிலாந்தின் ஆடுகளங்கள் மற்றும் அங்குள்ள சூழ்நிலைகளை நேரடியாக அனுபவிப்பது போன்றவை வைபவின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் உதவும்." என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com