நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிளேர் டிக்னேர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தனது மனைவி சாரா ரத்த புற்றுநோய் பாதிப்பால் போராடியதையும், 8 மாத கால சிகிச்சைக்கு பிறகு அதில் இருந்து மீண்டு வந்ததையும் உணர்வுபூர்வமாக பகிர்ந்து கொண்டார். 33 வயதான டிக்னேர் கூறுகையில்,

களத்தில் எனது தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்.எனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்தில் மிகுந்த அழுத்தத்தை உணர்ந்தேன். பின்னர் சாராவுக்கு புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது, அந்த சூழல் ரொம்ப கடினமாக இருந்தது. கடந்த 2 ஆண்டுகளில் நான் பெற்ற அனுபவத்தின் மூலம் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து வாழ்வதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டேன். நான் எப்போதும் முகத்தில் புன்னகையுடன் விளையாட முயற்சிக்கிறேன். கிரிக்கெட்டை தாண்டி வாழ்க்கையில் இன்னும் பல விஷயங்கள் உள்ளன. கிரிக்கெட் எனக்கு நிறைய கொடுத்திருக்கின்றன. ஆனால் எப்படி என்றாலும் நாள் இறுதியில் வீட்டுக்கு சென்று மனைவி, மகளை பார்ப்பதை நினைக்கும் போது, மகிழ்ச்சியாகவும், அதிர்ஷ்டசாலியாகவும் உணர்கிறேன். எனவே கிரிக்கெட் என்பது அந்த வாழ்க்கையை விட சற்று சிறியது தான்' என்றார்.