புதுடெல்லி,
நியூசிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இஷான் கிஷன் அணிக்குத் திரும்பியதால், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி விளையாடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டார். இந்த முடிவு குறித்து முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி நேற்று (வெள்ளிக்கிழமை) ஆக்லாந்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, கிளென் பிலிப்ஸ் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 260 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 35 ரன்கள் எடுத்தார். இதனால் நியூசிலாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் டி20 போட்டிக்கு பிறகு காயம் காரணமாக இஷான் கிஷன் விலகியதால், அவருக்குப் பதிலாக 2-வது மற்றும் 3-வது போட்டிகளில் வைபவ் சூர்யவன்ஷி விளையாடினார். அந்த இரு போட்டிகளிலும் அவர் முறையே 4 மற்றும் 45 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில், 4-வது போட்டிக்கு முன்பு இஷான் கிஷன் உடற்தகுதி பெற்று அணிக்கு திரும்பினார். இதனால் அவருக்கு பதிலாக விளையாடி வந்த சூர்யவன்ஷி அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த முடிவை ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து காஷ் சோப்ரா பேசுகையில், “கடந்த போட்டியில் அபிஷேக் சர்மா சதம் அடித்தார். வைபவ் சூர்யவன்ஷி 45 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் பேட்டிங்கும் சிறப்பாக இருந்தது.
இருப்பினும் இஷான் கிஷன் உடற்தகுதி பெற்றால் அவருக்கு பதிலாக அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி வெளியேற வேண்டும் என்பது சரிதான். ஆனால், இந்த போட்டி தொடரின் முடிவை தீர்மானிக்காத ஆட்டம் என்னும்போது வைபவ் சூர்யவன்ஷியை நீக்கியது ஏன்?.
யாராவது காயமடைந்தால் அல்லது விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால் மட்டும்தான் அவருக்கு வாய்ப்பு வழங்குவீர்களா? அப்படியென்றால் அவரை வீட்டுக்கு அனுப்பி உள்ளூர் முதல் தரப் போட்டிகளில் விளையாட சொல்லலாம்.
இந்திய அணியின் ஓய்வறையில் இருப்பதன் மூலம் அவர் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். ஆனால், நீண்ட காலமாக விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தால், அவர் களத்தில் இறங்கி பேட்டிங் செய்ய வேண்டியது அவசியம். அவரை வைத்து என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. அவர் அணியில் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது” என்று ஆகாஷ் சோப்ரா கூறினார்.
இதுகுறித்து காஷ் சோப்ரா பேசுகையில், “கடந்த போட்டியில் அபிஷேக் சர்மா சதம் அடித்தார். வைபவ் சூர்யவன்ஷி 45 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் பேட்டிங்கும் சிறப்பாக இருந்தது.
இருப்பினும் இஷான் கிஷன் உடற்தகுதி பெற்றால் அவருக்கு பதிலாக அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி வெளியேற வேண்டும் என்பது சரிதான். ஆனால், இந்த போட்டி தொடரின் முடிவை தீர்மானிக்காத ஆட்டம் என்னும்போது வைபவ் சூர்யவன்ஷியை நீக்கியது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது.