பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் - 84 ரன்களில் சுருண்ட தாய்லாந்து... 35 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் - 84 ரன்களில் சுருண்ட தாய்லாந்து... 35 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி
Published on

துபாய்,

பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற 5வது லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை 35 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது.

பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்

பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கியது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா என மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றுள்ளன.

119 ரன்கள்

இத்தொடரில் நேற்று இரவு நடைபெற்ற 5வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் முனீபா அலி அதிகபட்சமாக 54(52) ரன்கள் எடுத்தார்.

35 ரன்கள்

இதையடுத்து 120 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தாய்லாந்து அணி பாகிஸ்தானின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி 84 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சனிடா சுத்திருவாங் 25(24) ரன்கள் எடுத்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com