பெண்கள் ஆசிய கோப்பை: ஹாங்காங்கிற்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு

இரவு 8 மணிக்கு இப்போட்டி நடைபெற உள்ளது.
பெண்கள் ஆசிய கோப்பை: ஹாங்காங்கிற்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு
Published on

துபாய்,

பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான், ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.

பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்

பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கியது.

இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா என மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றுள்ளன

பாகிஸ்தான் - ஹாங்காங்

பெண்கள் ஆசிய கோப்பை டி20 தொடரில் இன்று நடைபெறும் 11வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.

டாஸ்

இந்நிலையில், இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, பாகிஸ்தான் தொடக்க வீராங்கனைகள் களமிறங்கி விளையாட உள்ளனர். துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இப்போட்டி நடைபெற உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com