பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது.
Image Courtesy: @BCCIWomen
Image Courtesy: @BCCIWomen
Published on

பெங்களூரு,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.

இதில் முதலில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com